இந்து சமயக் கோயில்கள்
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான் [3].இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சித்ர சபை - திருக்குற்றாலம்
- தாமிர சபை- திருநெல்வேலி
]முப்பீட தலங்கள்
- அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
- ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
- வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச ஆசன தலங்கள்
- ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
- களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
- நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
- விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
- செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
- தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
- சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
- கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
- தாருகாபுரம் - நீர் தலம்
- தென்மலை- காற்று தலம்
- தேவதானம் - ஆகாய தலம்
]காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
- சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
- ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
- கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
- திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
- பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
